Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தகவல்

By: Karunakaran Wed, 21 Oct 2020 3:03:31 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தகவல்

சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார். இதனால் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர், தென்சீன கடல் விவகாரம், கொரோனா வைரஸ், டிக் டாக் என இருநாடுகள் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ், அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

new york times,us president trump,bank account,china ,நியூயார்க் டைம்ஸ், அமெரிக்க அதிபர் டிரம்ப், வங்கி கணக்கு, சீனா

டிரம்ப் ஜனாதிபதியானபோது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் 750 டாலர்கள் செலுத்தி உள்ளார். அவரது சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா வங்கி கணக்கானது டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது. இது ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதாக டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க தேர்தலுக்கு மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags :