Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குயர்னவாகாவில் புதிதாக திறக்கப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்தது

குயர்னவாகாவில் புதிதாக திறக்கப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்தது

By: vaithegi Fri, 10 June 2022 8:50:30 PM

குயர்னவாகாவில் புதிதாக திறக்கப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்தது

குயர்னவாகா: மெக்சிகோ தலைநகரில் தெற்கில் அமைந்துள்ள குயர்னவாகா நகரம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட மிகவும் பிரபலமானது. இங்கு, புதிதாக தொங்கு பாலம் ஒன்றை அந்நகர மேயர் திறந்து வைத்தார்.

அங்கு அதிகாரிகள் உள்பட மக்கள் சிலர் பாலத்தின் மீது நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில், சுமார் 20 பேர் நீரோடையில் விழுந்து படுகாயமடைந்தனர். எட்டு பேருக்கு எலும்பு முறுவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நான்கு நகர சபை உறுப்பினர்கள், இரண்டு நகர அதிகாரிகள் மற்றும் ஒரு உள்ளூர் நிருபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரியவந்துள்ளது.

பாலம் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பாலம் அறுந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்பத்தியது. மேலும் இதனை பெருமபாலானோர் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.


Tags :
|