Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

By: Monisha Wed, 03 June 2020 11:05:25 AM

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரசை ஒழித்துக்கட்ட முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரஷியாவில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்துக்கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது.

coronavirus virus,vaccine,russia,experiment,russian military ministry ,கொரோனா வைரஸ்,தடுப்பூசி,ரஷியா,பரிசோதனை,ரஷிய ராணுவ அமைச்சகம்

இதுபற்றி ராணுவ அமைச்சகம் கூறுகையில், ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர்களின் முதல் குழுவுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48-வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.

ரஷியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பது வரும் ஜூலை மாதத்தில் முடிவடையும் என்று ராணுவ அமைச்சகம் சொல்கிறது.

Tags :
|