Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக 300 பேருக்கு செலுத்தி சோதனை

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக 300 பேருக்கு செலுத்தி சோதனை

By: Karunakaran Sun, 02 Aug 2020 2:06:03 PM

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி அடுத்த கட்டமாக 300 பேருக்கு செலுத்தி சோதனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரியை விஞ்ஞானிகள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து முதல்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். முதல் கட்டபரிசோதனையில், உடல் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பதால், அடுத்த கட்டமாக சுமார் 300 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை நடைபெறவுள்ளது.

corona vaccine,corona test,300 people,uk ,கொரோனா தடுப்பூசி, கொரோனா சோதனை, 300 பேர், இங்கிலாந்து

இந்த தடுப்பூசி சோதனை செய்யவுள்ள 300 பேரில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் ராபின் ஷாடோக் இதுகுறித்து கூறுகையில், எங்களது தடுப்பூசி நல்ல வேலை செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. எனவே நாங்கள் அடுத்த அடியை முன் நோக்கி வைக்கிறோம். அக்டோபர் மாதத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி போதிப்பதை உறுதி செய்யும் விதமாக தற்போது நூற்றுக்கணக்கானோரை இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். இது வேலை செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Tags :