Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேட் கியூ வைரஸ் என்ற அடுத்த வைரஸ்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கேட் கியூ வைரஸ் என்ற அடுத்த வைரஸ்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

By: Nagaraj Wed, 30 Sept 2020 12:00:24 PM

கேட் கியூ வைரஸ் என்ற அடுத்த வைரஸ்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சீனாவில் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவுக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் அடுத்த வைரஸா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன.

கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாக புனேவில் இருக்கின்ற ஐசிஎம்ஆரின் வைரலாஜி ஆய்வக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

warning,kate q virus,china,scientists,india ,எச்சரிக்கை, கேட் கியூ வைரஸ், சீனா, விஞ்ஞானிகள், இந்தியா

நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரின் மாதிரியில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக அவர்கள் கூறியிருக்கின்றனர். அதன் மூலமாக அவர்கள் இருவரும் இந்த வைரசால் கட்டாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் எனவும் கூறியுள்ளனர். அதே சமயத்தில் ஆய்வு செய்யும் போது எவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கிடையாது.

இந்த வைரஸ் சீனாவின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அதிக அளவு காணப்படுகிறது. இந்தியாவில் இருக்கின்ற சூழலில் மூன்று வகையான கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|