Advertisement

உலகின் மிக நீளமான நதியான நைல் வறண்டு வருவதாக தகவல்

By: Nagaraj Wed, 08 Mar 2023 7:51:44 PM

உலகின் மிக நீளமான நதியான நைல் வறண்டு வருவதாக தகவல்

எகிப்து: உலகின் மிக நீளமான நதியான நைல் நதி தற்போது வறண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குளோபல் வார்மிங் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விஞ்சானிகள் பல ஆண்டுகளாகவே உரக்க குரல் கொடுத்து வருகிறார்கள். தற்போது உலகெங்கும் பூகம்பங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருவது தொடர்கிறது.

கடந்த வாரத்தில் தண்ணீர் நகரமான இத்தாலியின் வெனிஸ் பகுதிகள் வறண்ட புகைப்படங்கள் வெளியாகி உலகினை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தற்போது உலகின் மிக நீண்ட நைல் நதியும் வறண்டு வருவதாக விஞ்சானிகள் எச்சரித்து வருகின்றனர்.

உலகின் மிக நீளமான நதி என்றால் அது நைல் நதி தான். தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கிறது நைல் நதி. உலகின் ஒரு நாகரீகமும் ஆற்றங்கரையில் தான் தோன்றியிருக்கிறது. அந்த வகையில் நைல் நதியின் நாகரீகமும், வரலாறும் மிகவும் தொன்மையானவை.

concern,scientists,nile river,drying up,ancient ,கவலை, விஞ்ஞானிகள், நைல் நதி, வறண்டு வருகிறது, பழமை

எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.

இத்தகைய பழமை சிறப்பு வாய்ந்த நைல் நதி வறண்டு வருவது விஞ்சானிகள் மற்றும் புவியியல் வல்லுனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது.

Tags :