Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது

By: vaithegi Wed, 17 Aug 2022 3:48:45 PM

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது

ஊட்டி: நீலகிரியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக 2-வது வாரத்தில் தான் தொடங்கியது. இதை அடுத்து அதன்பின் கடந்த மாதம் வரை மிக தீவிரமாக மழை பெய்து.

எனவே இது வழக்கத்தைவிட 91 சதவீதம் அதிகம். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8 நாட்கள் என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது.எனவே இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

rain,nilgiris,southwest monsoon ,மழை ,நீலகிரி,தென்மேற்கு பருவமழை

இதனை தொடர்ந்து இந்த மழையால் அவலாஞ்சி, ஊட்டி, கூடலூர் பகுதிகளில் மிக கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே மண்சரிவும் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் அம்ரித் கூறுக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவ்வ் மழை கொட்டித் தீா்த்தது. இதுவரை தென்மேற்கு பருவ மழையானது இயல்பை விட 124 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

மேலும் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுத்து அவற்றையும் அகற்றும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனா். மேலும், ஊட்டி பகுதியில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகளில் காரட் மற்றும் பீட்ரூட் தலா 5 ஏக்கரிலும், தேயிலை 4 ஏக்கரிலும், கூடலூா் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை 2 ஏக்கரிலும் சேதமடைந்துள்ளது என அவர் கூறினார்.

Tags :
|