Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட கொரியா அதிபர் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

வட கொரியா அதிபர் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

By: Karunakaran Fri, 21 Aug 2020 6:32:05 PM

வட கொரியா அதிபர் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவராக கிம் ஜாங்க் உன் பதவி வகிக்கின்றார். சக்தி வாய்ந்த தலைவராக கிம் ஜாங்க் உள்ளார். வட கொரியாவில் இவரது ஆட்சி கடுமையானதாக உள்ளதாக கூறப்படுகிறது. வட கொரியாவில் கருத்து சுதந்திரம் என்பது கிடையாது. இதனால் அங்கு அதிபருக்கு எதிராக எந்தவித குற்றமும் சுமத்தப்படுவதில்லை.

இந்நிலையில் 38 வயதான கிம் ஜாங்க் உன் உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.

north korean president,hand over,sister,kim jong un ,வட கொரிய ஜனாதிபதி, ஒப்படைத்தல், சகோதரி, கிம் ஜாங் உன்

தற்போது, ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், 31 என்பவருக்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள் இருக்கும் அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. கிம் யோ ஜாங் அவரது அண்ணனை விட கடுமையானவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக கிம்மின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில், அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தாக கூறப்பட்டது. தற்போது கிம் யோ ஜாங்க்கிற்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

Tags :
|