Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு ... வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Thu, 12 Jan 2023 09:30:15 AM

வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு ...  வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: இன்றுடன் விலக வாய்ப்பு ...... தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் 15.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

meteorological centre,northeast monsoon ,வானிலை ஆய்வு மையம் ,வடகிழக்கு பருவமழை

அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு ,புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலூர், ஆந்திர ராயலசீமா , கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :