Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்குவது தொடர்பான அறிவிப்பு அக்.28 ஆம் தேதி வெளியாகும்

தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்குவது தொடர்பான அறிவிப்பு அக்.28 ஆம் தேதி வெளியாகும்

By: vaithegi Wed, 18 Oct 2023 3:44:14 PM

தீபாவளி முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்குவது தொடர்பான அறிவிப்பு அக்.28 ஆம் தேதி வெளியாகும்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 15,000 சிறப்பு பேருந்துகள் .... தமிழகத்தில் பண்டிகை தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்களை வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு சில மணி நேரத்திலேயே முழுமையாக முடிவடைந்த நிலையில் பல்வேறு பயணிகள் சிறப்பு பேருந்து புக்கிங்கிற்காக காத்து கொண்டிருக்கின்றனர். மேலும், ஆம்னி பேருந்து புக்கிங்கும் ஓரளவுக்கு முடிவடைந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் சிறப்பு பேருந்து பற்றிய அறிவிப்பிற்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

special buses,diwali ,சிறப்பு பேருந்துகள்,தீபாவளி

அந்த வகையில், கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மொத்தமாக 15,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதையடுத்து அதே போல, இந்தாண்டும் 15,000 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயங்குவது தொடர்பான அறிவிப்பு வருகிற அக்.28 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :