Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 07 ஆயிரத்து 615 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 07 ஆயிரத்து 615 ஆக உயர்வு

By: Monisha Wed, 03 June 2020 2:51:47 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 07 ஆயிரத்து 615 ஆக உயர்வு

உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க செய்து வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து, 7-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,909 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 217 இறப்புகள் பதிவாகியுள்ளன.

1 லட்சத்து 01 ஆயிரத்து 497 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,00,303 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 815 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது நாட்டில் உள்ள மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 07 ஆயிரத்து 615 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

coronavirus,india,ministry of health and family welfare,corona vulnerability,death toll ,இந்தியா,கொரோனா வைரஸ்,இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்,கொரோனா பாதிப்புகள், பலி எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 177 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 2 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,096 ஆக உள்ளது. இறப்பு எண்ணிக்கை 24 ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஜார்கண்டில் 712 ஆக உள்ளது, அங்கு 387 பேர் சிகிச்சையில் உள்ளனர். 320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 5 ஆக உள்ளது.

Tags :
|