Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் அமெரிக்காவில் பலியடைந்தவர்கள் எண்ணிக்கை 1.28 லட்சத்தை தாண்டியது

கொரோனாவால் அமெரிக்காவில் பலியடைந்தவர்கள் எண்ணிக்கை 1.28 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Tue, 30 June 2020 09:24:52 AM

கொரோனாவால் அமெரிக்காவில் பலியடைந்தவர்கள் எண்ணிக்கை 1.28 லட்சத்தை தாண்டியது

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைக் கடந்துள்ளது. இது மக்கள் மத்தியில் வெகுவாக பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதில் அதிகளவு பாதிப்பை சந்தித்த நாடு என்றால் அது அமெரிக்காதான். இங்கு கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது.

corona,america,vulnerability,number of casualties,fear ,கொரோனா, அமெரிக்கா, பாதிப்பு, பலி எண்ணிக்கை, அச்சம்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.81 லட்சத்தைத் தாண்டியது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 11.06 லட்சத்தைக் கடந்துள்ளது.

Tags :
|