Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரிப்பு

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரிப்பு

By: Nagaraj Mon, 23 Jan 2023 6:40:07 PM

கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 015- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. இதனை அடுத்து தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

corona,treatment,incidence rate,no ,கொரோனா ,சிகிச்சை, தடுப்பூசி, பாதிப்பு விகிதம், எண்ணிக்கை

இதையடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,934- ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 015- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,735- ஆக அதிகரித்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 0.11 ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதம் ஆகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் கொரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 220.28 கோடி டோஸாக அதிகரித்துள்ளது.

Tags :
|