Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது... சுகாதாரத்துறை நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது... சுகாதாரத்துறை நடவடிக்கை

By: Nagaraj Tue, 28 Mar 2023 11:24:28 AM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்கிறது... சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை: உயர்கிறது கொரோனா பாதிப்பு... தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ நெருங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்றொரு புறம் தமிழகத்தில் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழகம், குஜராத், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

rehearsal,central government,health department,officials,hospital ,ஒத்திகை, மத்திய அரசு, சுகாதாரத் துறை, அதிகாரிகள், மருத்துவமனை

நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாசப்பிரச்சனை பாதிப்பு அதிகம் உள்ளது. அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாடு தழுவிய அளவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆயிரத்து 890 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இது, கடந்த 210 நாட்களில் இல்லாத உயர்வு என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகளின் தயார்நிலை குறித்து வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ஒத்திகை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :