Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

By: Karunakaran Sat, 13 June 2020 12:25:35 PM

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மார்ச் மாதம் முதல் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநில பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி நுழைந்த இந்த கொரோனா வைரஸ் அங்கு அதிவேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் மெதுவாக பரவிய கொரோனா தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. மே மாத இறுதியில் மட்டும் இங்கு 1,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

dharavi,coronavirus,maharastra,coronavirus,huts ,தாராவி, கொரோனா பாதிப்பு,மகாராஷ்டிரா,குடிசைப்பகுதி

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று தாராவியில் புதிதாக 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் தாராவியில் இதுவரை 2,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் தாராவியில் மேலும் 2 பேர் இறந்ததால், அங்கு இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 பேராக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று தாதரில் 15 பேருக்கும், மாகிமில் 14 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :