Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது

By: Karunakaran Wed, 17 June 2020 3:15:08 PM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானிலும் கொரோனா தாக்குதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 4 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 48 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது.

coronavirus,pakistan,occupied kashmir,sindh province ,கொரோனா பாதிப்பு,பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர்,சிந்து மாகாணம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 56 ஆயிரத்து 390 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 663 பேர் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள். மேலும் பஞ்சாபில் 55 ஆயிரத்து 878 பேருக்கும், சிந்து மாகாணத்தில் 55 ஆயிரத்து 581 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தான் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது.

Tags :