Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.53 லட்சமாக அதிகரிப்பு

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.53 லட்சமாக அதிகரிப்பு

By: Nagaraj Tue, 26 May 2020 3:00:52 PM

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.53 லட்சமாக அதிகரிப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை இலட்சத்தை கடந்துள்ளது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 3 இலட்சத்து 53 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 8,946 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


russia,vulnerability,3.5 lakhs,high impact,corona ,ரஷ்யா, பாதிப்பு, 3.5 லட்சம், அதிக பாதிப்பு, கொரோனா

மேலும் 92 பேர் பலியாகி உள்ளனர் என்று ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு வாரத்திற்கு பிறகு ரஷ்யாவில் குறைவான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 18ம் தேதி 91 பேர் உயிரிழந்திருந்தனர்.

russia,vulnerability,3.5 lakhs,high impact,corona ,ரஷ்யா, பாதிப்பு, 3.5 லட்சம், அதிக பாதிப்பு, கொரோனா

உலகளவில் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள மூன்றாவது நாடான ரஷ்யாவில் வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 3,633 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|