Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சத்தை தாண்டியது

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Sun, 28 June 2020 10:40:19 AM

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சத்தை தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

பல்வேறு நாடுகள் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தற்போது, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

saudi arabia,corona virus,corona death,corona prevalence ,சவுதி அரேபியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,78,504 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 37 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 1,511 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :