Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Wed, 29 July 2020 4:52:25 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.31 லட்சத்தை கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 15,31,669 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona infections,corona virus,india,corona death ,கொரோனா நோய்த்தொற்றுகள், கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா மரணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்புடைய 9,88,030 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 5,09,447 பேர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக 34,193 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 768 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,08,855 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் இதுவரை 1,77,43,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|