Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Tue, 04 Aug 2020 12:21:41 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பாலும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 50 ஆயிரத்துக்கு மேல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 3 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,corona death,corona prevalence ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 771 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் பலியானோர் விகிதம் 2.11 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 574 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 65.77 சதவீதமாக உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடைய 5 லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 சதவீதத்துக்கு மேற்பட்ட மரணங்கள், பிற நோய்களால் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|