Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Sun, 30 Aug 2020 3:57:01 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை தாண்டி ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,42,733 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63498 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona infection,india,corona virus,corona death ,கொரோனா தொற்று, இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

இந்தியாவில் நேற்று மட்டும் 948 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,13,933 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 64935 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக முதலிடத்தில் உள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,65,302 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.81 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 76.47 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|