Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Mon, 05 Oct 2020 4:46:51 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus,corona infections,india,corona death ,கொரோனா வைரஸ், கொரோனா நோய்த்தொற்றுகள், இந்தியா, கொரோனா மரணம்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,86,704 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 76737 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் அதிகம்.

தற்போது, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,34,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 1.55 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 84.34 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.




Tags :
|