Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது!

By: Monisha Thu, 22 Oct 2020 12:08:56 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 60 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்தது. மொத்த பாதிப்பு 77,06,946. ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 702 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,616 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,74,518 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 79,415 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

india,corona virus,infection,treatment,kills ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,15,812 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 9.86 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 9,86,70,363 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 14,69,984 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Tags :
|