Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக உயர்வு

By: Monisha Wed, 29 July 2020 12:55:25 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக உயர்வு

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் இதுவரை 1 கோடியே 69 லட்சத்து 01 ஆயிரத்து 407 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 9 லட்சத்து 88 ஆயிரத்து 030 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

india,corona virus,infection,treatment,death ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 5,09,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 34,193 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 768 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,08,855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1,77,43,740 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இடத்தில் தமிழகமும், மூன்றாம் இடத்தில் டெல்லியும் உள்ளது.

Tags :
|