Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் ஏப்ரல் மாத இறுதிக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது

ரஷ்யாவில் ஏப்ரல் மாத இறுதிக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது

By: Nagaraj Mon, 20 July 2020 6:53:35 PM

ரஷ்யாவில் ஏப்ரல் மாத இறுதிக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது

ரஷ்யாவில் ஏப்ரல் மாத இறுதிக்கு பிறகு கொரோனா வைரசால் (கொவிட்-19) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நாளொன்றுக்கான பாதிப்பு ஆறாயிரத்தை கடந்து சென்றிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 29ஆம் திகதிக்கு பிறகு (5,841பேர்) ஆறாயிரத்திற்கும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 5,940பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 85பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.


russia,corona,vulnerability,april,minimum ,ரஷ்யா, கொரோனா, பாதிப்பு, ஏப்ரல் மாதம், குறைந்தது

மேலும், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், ஏழு இலட்சத்து 77ஆயிரத்து 486பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக 12ஆயிரத்து 427பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 11ஆயிரத்து 457பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து இலட்சத்து 53ஆயிரத்து 602பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Tags :
|
|
|