Advertisement

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது

By: Nagaraj Tue, 18 Aug 2020 7:28:47 PM

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது

கொரோனா பாதிப்பு குறைகிறது... ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்காயிரத்து 846பேர் பாதிப்படைந்ததோடு, 132பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

russia,corona vulnerability,relapse,treatment,cure ,ரஷ்யா, கொரோனா பாதிப்பு, குறைவடைகிறது, சிகிச்சை, குணம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை ஒன்பது இலட்சத்து 32ஆயிரத்து 493 பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 872ஆக உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 73ஆயிரத்து 993பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏழு இலட்சத்து 42ஆயிரத்து 628பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|