Advertisement

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2895 ஆக உயர்ந்தது

By: Nagaraj Mon, 17 Aug 2020 5:13:01 PM

இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2895 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஓமானில் இருந்து வருகை தந்த 2 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

sri lanka,corona,infection,medical road,surveillance ,இலங்கை, கொரோனா, தொற்று, வைத்திய சாலை, கண்காணிப்பு

இதேநேரம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து இன்று மேலும் 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 208 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று சந்தேகத்தில் 55 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|