Advertisement

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6426 ஆனது

By: Nagaraj Wed, 29 July 2020 8:45:28 PM

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6426 ஆனது

இன்று தமிழகத்தில் 6426 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் இன்று (ஜூலை 29) ஒரே நாளில் 6,426 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் இன்று 6,426 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 6,393 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 33 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.

corona,increased,hospital,tamil nadu ,கொரோனா, அதிகரித்துள்ளது, மருத்துவமனை, தமிழகம்

தமிழகத்தில் உள்ள 119 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 61) மூலமாக, இன்று மட்டும் 60,794 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 660 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று மட்டும் 5,927 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 883 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 82 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 54 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3,741 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|