Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sun, 16 Aug 2020 1:16:03 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2,14,94,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் தற்போது கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.72 லட்சத்தைக் கடந்துள்ளது.

united states,corona virus,corona death,corona prevalence ,அமெரிக்கா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை கொரோனா பரவலை தடுக்க பின்பற்றப்படுகிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில், இந்தியா நாடுகள் உள்ளன.

Tags :