Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Tue, 18 Aug 2020 3:23:18 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு சிக்கி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

corona infection,united states,corona virus,corona death ,கொரோனா தொற்று, அமெரிக்கா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 500-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.73 லட்சத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 29.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :