Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 19 Sept 2020 2:48:13 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9.50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

corona infections,united states,corona death,corona prevalence ,கொரோனா நோய்த்தொற்றுகள், அமெரிக்கா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் உள்ளன. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.

Tags :