Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்கியது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Thu, 20 Aug 2020 4:15:36 PM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.24 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்கியுள்ளது.

corona infection,united states,corona virus,corona prevalence ,கொரோனா தொற்று, அமெரிக்கா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் ஒரே நாளில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பினால் 1200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.76 லட்சத்தைக் கடந்துள்ளது.

இருப்பினும் அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக உள்ளன. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags :