Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்வு

By: Monisha Tue, 14 July 2020 5:07:40 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்வு

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.

thiruvannamalai district,corona virus,infection,treatment,deaths ,திருவண்ணாமலை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

நேற்று பாதிக்கப்பட்டவர்களில், வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், நாவல்பாக்கத்தில் தலா ஒருவர், தச்சூர், தெள்ளார், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், சேத்துப்பட்டில் தலா 2 பேர், ஆக்கூர், கலசபாக்கத்தில் தலா 4 பேர், வந்தவாசியில் 8 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 9 பேர், காட்டாம்பூண்டியில் 13 பேர், போளூரில் 15 பேர், கிழக்கு ஆரணியில் 20 பேர் ஆவர். இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Tags :