Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,443 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,443 ஆக உயர்வு

By: Monisha Wed, 22 July 2020 6:24:07 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,443 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4,443 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 4,965 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது.

thiruvannamalai district,corona virus,infection,death,treatment ,திருவண்ணாமலை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,443 ஆக உயர்ந்துள்ளது. 91 பெண்கள், 8 குழந்தைகள், 7 சுகாதாரப்பணியாளர்கள் உட்பட 210 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,466 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 35 பேர் பலியாகி உள்ளனர்.

Tags :
|