Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது

By: Karunakaran Mon, 10 Aug 2020 10:09:13 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 7.33 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64,950 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|