Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் அதிகரிப்பு

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் அதிகரிப்பு

By: vaithegi Sun, 13 Aug 2023 10:33:48 AM

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் அதிகரிப்பு

இந்தியா: 1 மாதத்தில் 80% உயர்வு .... உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிப்பு.

அதாவது,கடந்த ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியு உள்ளது.
இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. எனினும், இறப்பு எண்ணிக்கை 57 சதவீதம் குறைந்து 2,500 ஆக உள்ளது.

corona,world health organization ,கொரோனா ,உலக சுகாதார அமைப்பு

இதையடுத்து இது புதிய வகை கொரோனா தொற்று EG.5 அல்லது “Eris” என அழைக்கப்படும் இந்த மாறுபாடு, XBB.1.9.2 எனப்படும் Omicron துணை வகையுடன் தொடர்புடையது. இந்த புதிய வகை கொரோனா தான் உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறதாம்.

WHO தகவலின்படி, இந்த கொரோனா தொற்றின் அதிக பாதிப்பு கொரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து பதிவாகி உள்ளன. பிரேசில், கொரியா, ரஷ்யா, பெரு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.

Tags :
|