Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 92 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 92 லட்சமாக அதிகரிப்பு

By: Karunakaran Fri, 07 Aug 2020 10:35:30 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 92 லட்சமாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,corona virus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் தற்போது 1 கோடியே 92 லட்சத்து 37 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புடைய 61 லட்சத்து 75 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 187 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 7 லட்சம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|