Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக அதிகரிப்பு

By: Karunakaran Sat, 08 Aug 2020 2:10:59 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சமாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரோனா அதிகம் பாதிப்புள்ள அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது, 1 கோடியே 95 லட்சத்து 24 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புடைய 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் மருத்துமவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். இவர்களில் 65 ஆயிரத்து 98 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனாவால் இதுவரை 7 லட்சம் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய அமெரிக்கவில் 50,95,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

Tags :
|