Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியது

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Fri, 02 Oct 2020 5:12:41 PM

கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.60 லட்சத்தை தாண்டியது

1.60 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஒரு இலட்சத்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு ஒரு இலட்சத்து 60ஆயிரத்து 535பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 777பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 22பேர் உயிரிழந்துள்ளனர்.

hospital,corona virus,anxiety,vulnerability ,மருத்துவமனை, கொரோனா வைரஸ், கவலைக்கிடம், பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 319பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14ஆயிரத்து 866பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 350பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :