Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது

கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 12 Sept 2020 09:39:08 AM

கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் கொலம்பியா 6-வது இடத்தில் உள்ளது. தற்போது கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. கொலம்பியாவில் ஒரே நாளில் 7,424 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

corona virus,colombia,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், கொலம்பியா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

கொலம்பியாவில் ஒரே நாளில் கொரோனா தாக்குதலால் 243 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 518 ஆக உள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.84 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா, பிரேசில், ரஷ்யா அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா அதிகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Tags :