Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sun, 30 Aug 2020 09:38:41 AM

கொலம்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8.44 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி கொலம்பியா 7-வது இடத்தில் உள்ளது.

corona virus,colombia,coroana death,corona prevalence ,கொரோனா வைரஸ், கொலம்பியா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. கொலம்பியாவில் ஒரே நாளில் 9,394 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு அடைந்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கொலம்பியாவில் ஒரே நாளில் கொரோனா தாக்குதலால் 297 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இருப்பினும் அங்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4.40 லட்சத்தை தாண்டியுள்ளது.

Tags :