Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 15 Aug 2020 12:22:00 PM

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.12 கோடியைக் கடந்துள்ளது. மேலும், 7.60 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இதுவரை 1.40 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணடமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

corona victims,mexico,corona virus,corona death ,கொரோனா பாதிப்பு , மெக்சிகோ, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

மெக்சிகோவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தற்போது, மெக்சிகோவில் 3.41 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடைய 1.08 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|