Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியது

By: Karunakaran Fri, 21 Aug 2020 3:21:26 PM

மெக்சிகோவில் கொரோனா பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக 7.90 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பின்னும் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணடமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

corona victims,mexico,corona virus,corona death ,கொரோனா பாதிப்பு, மெக்சிகோ, கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

தற்போது மெக்சிகோவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் மெக்சிகோவில் கொரோனா வைரஸுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மெக்சிகோவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 3.67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடைய 1.11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|