Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

மெக்சிகோவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Fri, 09 Oct 2020 3:46:09 PM

மெக்சிகோவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது

எட்டு இலட்சத்தை கடந்த பாதிப்பு... மெக்சிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எட்டு இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து நான்காயிரத்து 488பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட நாடாக விளங்கும் மெக்சிகோவில், இதுவரை 83ஆயிரத்து 96பேர் உயிரிழந்துள்ளனர்.

mexico,corona,over 8 million,worrisome ,மெக்சிகோ, கொரோனா, 8 லட்சத்தை கடந்தது, கவலைக்கிடம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 300 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 370 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 789பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 553பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை அங்கு ஐந்து இலட்சத்து 83ஆயிரத்து 603பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|