Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sun, 15 Nov 2020 09:01:31 AM

மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 12.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 3.50 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 11-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் மேலும் 5,558 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,mexico,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், மெக்ஸிகோ, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

இதனால் மெக்சிகோவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தால் ஒரே நாளில் 568 பேர் உயிரிழந்துள்ளதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் மெக்சிகோவில் 7.41 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 1.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|