Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 12 Sept 2020 09:35:12 AM

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

தற்போது இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பாகிஸ்தான் 17-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

corona virus,pakistan,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பாகிஸ்தான், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,00,371 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,370 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் அங்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.88 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

Tags :