Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9.85 லட்சத்தை தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9.85 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Sun, 30 Aug 2020 09:20:56 AM

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9.85 லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது.

பல்வேறு நாடுகள் ஊரடங்கு தளர்வை அமல்படுத்தியுள்ளதாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்ததாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது.

corona virus,russia,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.85 லட்சத்தை தாண்டியது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 85 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 111 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருப்பினும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|