Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Wed, 19 Aug 2020 2:52:23 PM

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது. தற்போது, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 409 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,saudi arabia,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், சவுதி அரேபியா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

சவுதி அரேபியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,023 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு ஒரே நாளில் 34 பேர் கொரோனாவுக்கு பலியானதால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 3,470 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. முககவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்றவை கொரோனா பரவலை தடுக்க பின்பற்ற வலியுறுத்தப்படுகிறது.

Tags :