Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sun, 16 Aug 2020 12:56:02 PM

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2,14,94,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 1,413 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

saudi arabia,corona virus,corona death,corona prevalence ,சவுதி அரேபியா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனா பலியானோர் எண்ணிக்கை 3,369 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை கொரோனா பரவலை தடுக்க பின்பற்றப்படுகிறது.

Tags :