Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பபு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பபு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sat, 05 Sept 2020 09:10:33 AM

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பபு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது, உலகம் முழுவதும் 2.66 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, 8.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

corona virus,spain,corona death,corona prevelence ,கொரோனா வைரஸ், ஸ்பெயின், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும், ஒரே நாளில் கொரோனாவுக்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

Tags :
|